search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அரசு"

    ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மதரசாக்கள் கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார்.
    கொழும்பு:

    கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

    விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மதரசாக்களை (இஸ்லாமிய கல்விக் கூடங்கள்) இனி கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இலங்கை மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    மேலும், இலங்கையில் இஸ்லாமிய சட்ட (ஷரியா) பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளிக்க முடியாது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றவும் செய்யவும் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.



    எனவே, பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இனி அனுமதி அளிக்கும் வகையில் கல்வித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மனித குண்டுகள் வெடித்ததில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் 2 உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தூதர் மதிப்புக்குரிய மகாநாயகே தெரோஸ் உடன் சந்தித்து பாதுகாப்பு நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று தெரிவித்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் 21-4-2019 அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.



    ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்.
    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களை தொடர்ந்து அன்றிலிருந்து சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கப்பட்டது. #Colomboblast #SocialMedia
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் அன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் 8-வதாக நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இதைதொடர்ந்து, அன்று மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    மேலும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது.

    இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு இன்றுடன் நீக்கியது.  இதேபோல் தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 28 அன்று நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Colomboblast  #SocialMedia 

    இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.



    ‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.

    இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
    இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது. #SriLankablast #blastvictimscompensation
    கொழும்பு:

    இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 400-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றைய தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்ட இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் ஒரு லட்சம் ரூபாய் இந்தியாவின் 40 ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankablast #blastvictimscompensation
    இலங்கை அரசில் நடைபெற்றுள்ள தலைகீழ் மாற்றங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Rajapaksa
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கையின் பிரதமராக திடீரெனப் பதவியேற்று இருக்கிறார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. அந்நாட்டு சட்டவிதிகளுக்கு புறம்பாகவும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலும் ராஜபக்சேவைப் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அதிபர் மைதிரிபால சிறிசேனாவின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

    இத்தகைய நிலையில், தானும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக இத்தனை காலம் அதிபரின் கூட்டாளியாக விளங்கிய ரனில் விக்ரமசிங்கேவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசில் நடைபெற்றுள்ள இந்த தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதுபோல, ரனில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுக்கு வந்தார். ராஜபக்சேவின் வருகையின்போது அரசியல் காழ்ப்புணர்வுடன் பேட்டிகள், செய்திகள் வெளியிடப்பட்டன. அதே சூழலில், இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனாவை கொல்வதற்கு இந்திய உளவுப்பிரிவான ‘ரா’ அமைப்பு திட்டமிட்டிருப்பதாக இலங்கையில் செய்திகள் வெளியாயின. பின்னர் மறுப்பறிக்கையும் அவசரமாக தரப்பட்டது. எனினும், இது தொடர்பாக அந்நாட்டில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்தியாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் பிரமுகர்களின் பயணங்களும், குற்றச்சாட்டுகளும் வெளியான நிலையில், பிரதமர் பொறுப்பில் ரனில் விக்ரமசிங்கே நீடிக்கும் நிலையிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்சே திடீர் பிரதமராக பொறுப்பேற்றிருப்பதன் பின்னணி, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இலங்கை தொடர்பான வெளிநாட்டு உறவு மற்றும் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் பனிப்போரின் பின்னணியில் இலங்கை அரசில் இந்த திடீர் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆங்கில ஊடகங்களும், அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இத்தகைய நிலை தொடருமானால் அது இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு சவாலாக அமையும் ஆபத்து உண்டு என்ற கவலையையும் பிரதமருக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

    ஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள் பல மர்மங்களை உள்ளடக்கிய நிலையில், அவை அனைத்துமே வாழ்வுரிமை மறுக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வதைபடுகின்ற ஈழத்தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. அதுபோலவே தமிழக மீனவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது. எனவே இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், அதன் வெளியுறவுத்துறையும் தமிழர்கள் நலன் கருதியும், இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதியும் இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்தும், ரா உளவுப்பிரிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தெளிவுபடுத்திட வேண்டும்.

    தமிழர்கள் நலன் சார்ந்த எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருக்கும் 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக கவர்னருக்கு அனுப்பி இத்தனை காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு விடுக்கப்பட்ட சவாலாக தெரிகிறது.

    கவர்னர் இனியும் காலம் தாழ்த்தாமல், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது சாதகமான முடிவினை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதன் மீது மத்திய அரசும் கவனம் செலுத்திட வேண்டும். தமிழர்கள் பிரச்சினையைத் தனது கவனத்திற்கு அப்பாற்பட்டதாகவோ, சம்பந்தம் இல்லாததாகவோ மோடி அரசு கருதிடக்கூடாது. தமிழர் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எத்தகைய செயல்பாடுகளையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியது குறித்த மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது. #MaithripalaSirisena #RAW #assassinationplot
    கொழும்பு:

    இலங்கை போலீஸ் துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கும் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவையையும் கொல்ல டெலிபோனில் சதி திட்டம் தீட்டப்பட்டது. அது குறித்த தகவல்களை உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன் என தெரிவித்தார்.

    இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த மாதம் செப்டம்பர் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார். எனவே அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை அதிபர் சிறிசேனா மறுத்தார். பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசினார்.

    ஆனால் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது குறித்த விசாரணையை இலங்கை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை சதி திட்டம் தீட்டியதற்கான டெலிபோன் உரையாடல்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சீன நிறுவனமான குயாவேயின் தொழில் நுட்ப உதவியுடன் டெலிபோன் உரையாடலை மீண்டும் பெற முயற்சி நடைபெற்றது. அதற்காக இலங்கை போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் சதி திட்ட தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த விசாரணையின் போது தாமஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.ஐ.டி. போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே அவர்களின் பாதுகாப்பில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். #MaithripalaSirisena #RAW #assassinationplot
    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறையான ‘ரா’ திட்டம் தீட்டியதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. #MaithripalaSirisena #RAW #assassinationplot
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தின்போது தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ’ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான 'ரா' மீது குற்றம்சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ’ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.



    சிறிசேனா குற்றச்சாட்டினால் இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவு பாதிக்கப்படலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதினர்.

    இந்நிலையில், இந்த தகவலை இன்று இலங்கை அதிபரின் ஆலோசகரும், ஒருங்கிணைப்பு செயலாளருமான ஷ்ரிலால் லக்திலகா மறுப்பு தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல் அதிபர் மைத்ரிபாலா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். #MaithripalaSirisena #RAW #assassinationplot 
    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக கூறும் தினகரனால் அது முடியவே முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Jayakumar #Dhinakaran
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி. ஆரால் இதே நாளில் ஆரம்பித்த இயக்கமாகும். புரட்சித்தலைவி மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் சிதறி விடும். சுக்கு நூறாகி விடும் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

    அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் இந்த இயக்கத்தை எழுச்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் 3 ஆண்டில் பொன்விழா வருகிறது. அதையும் நாங்கள் தான் கொண்டாடுவோம். 100 ஆண்டு வரும்போது அந்த விழாவையும் நாங்கள்தான் கொண்டாடுவோம்.

    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக தினகரன் கூறுகிறார். அவரால் அது முடியவே முடியாது. கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கிறார். அதுவும் முடியாது.


    முதலில் அவர் ஆர்.கே.நகரில் ராஜினாமா செய்து விட்டு திரும்ப நின்று ஜெயிக்கட்டும். அதுவும் அவரால் முடியாது.

    எனவே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். அந்த மாதிரி கதையா இருக்கிறது. அவரிடம் ஏதோ ஒரு 5 சதவீதம் அளவுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதேதோ சொல்கிறார். எனவே ஒன்றும் நடக்க போவதில்லை.

    கடல்வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல்வற்றி செத்து போன கதைதான் தினகரனின் கதை.

    மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார். ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். சர்க்காரியா கமி‌ஷனை மறந்து விட்டு அவர் பேசக்கூடாது.

    எனவே மக்கள்தான் இறுதி எஜமானார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் நாங்கள்தான் ஜெயிப்போம்.

    இலங்கை அரசு 6 மீனவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த புதிய சட்டத்தை ஏற்க இயலாது. மத்திய அரசு இதில் தலையிட்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #Dhinakaran
    மனித நேயம் சிறிதுமின்றி இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடற்படை இந்திய மீனவர்களுக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் எட்டுப் பேரை கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில்தான் இப்படியொரு அபாண்டமான தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

    நட்பு நாடு என்று கூறிக்கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நாசகரமான தாக்குதல் நடத்தி முதுகில் குத்தும் இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு வருவது ஒருபுறமிருக்க, இலங்கை அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, ஒவ்வொரு மீனவருக்கும் 60 லட்சம் ரூபாய் அபராதம் என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் மனித நேய மற்றதும் அநியாயமானதுமான தீர்ப்பாகும்.

    இதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்படியொரு கொடுமையான புதிய சட்டம் வந்த போதே, தி.மு.க.வின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்த சட்டத்தை திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன்.

    ஆனால் அது பற்றியெல்லாம் வழக்கம் போல் கிஞ்சிற்றும் கவலைப்படாத மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அறவே ஒதுக்கி வைத்துவிட்டது. அ.தி.மு.க அரசும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் தூங்கி விட்டது.

    இதனால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கண்ணீர் சிந்தும் நிலை உருவாகி, அவர்களின் குடும்பங்கள் எல்லாம் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. டீசல் விலை உயர்வு, இலங்கைக் கடற்படைத்தொல்லை, படகுகள் பறிமுதல், இலங்கை அரசின் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் போன்ற பன்முனைத் தாக்குதலில் சிக்கி தமிழக மீனவர்களின் வாழ்க்கை அநியாயமாகப் பாழ்படுத்தப்படுகிறது.

    ஆகவே, மத்திய அரசு இனிமேலும் பொறுமையாக இருக்காமல் இலங்கை அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மனித நேயம் சிறிதுமின்றி இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு அறிவுரை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #SriLankanGovt

    சிங்கள கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடமையாக்க அந்த நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #fishermanboat #boat

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி ஒரு படகிலும், 8-ந்தேதி 2 படகிலும் என மொத்தம் 3 படகுகளில் சென்று 16 மீனவர்கள் இணைந்து நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர் 3 படகுகளுடன் மீனவர்களை பிடித்துச் சென்று இலங்கை ஊர்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு கடந்த 11-ந்தேதி அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளின் உரிமையாளர்களும் கடந்த 28-ந்தேதி ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் படகு உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும் மத்திய-மாநில அரசுகளும் இதுகுறித்து எவ்வித தகவலும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    படகு உரிமையாளர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிபதி, இலங்கை அரசின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டப்படி 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த உபகரணங்களையும் இலங்கை அரசு அரசுடைமையாக்க உத்தரவிட்டார்.

    சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். #fishermanboat #boat

    ×